அவுஸ்திரேலியாவில் அகதியாக வசித்து வந்த ஈழத்து இளைஞர் ஒருவர் வாகன விபத்து ஒன்றில் சிக்கி இன்று உயிரிழந்தார்
அவுஸ்திரேலியாவில் நீண்ட வருடங்களாக வதிவிட அனுமதி இன்றி வசித்து வந்த குறித்த இளைஞர் தேவை நிமிர்த்தம் வெளியில் சென்ற வேளை வாகன விபத்தில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்த இளைஞருக்கு அந்த நாட்டில் உறவினர்கள் யாரும் இன்மையினால் சடலத்தை உரிமை கோர யாரும் முன்வரவில்லை. இந்நிலையில் அந்த நாட்டு காவல்துறையினர் தமிழ்ச் சங்கத்துக்கு தகவல் வழங்கியுள்ளது
இவ் விபத்துச் சம்பவத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த எஸ் . தவச்செல்வன் (வயது 38 ) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்
குறித்த இளைஞர் உயிரிழந்த தகவல்களை குடும்பத்தாருக்கு அறிவிக்க உதவுமாறு தமிழ் சங்கம் ஊடாக பொலிஸார் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது