நளினி தற்கொலை முயற்சி:விசாரணை நடத்த பழ. நெடுமாறன் வற்புறுத்தல்!

0
349

நளினி தற்கொலை முயற்சி தொடர்பில் விசாரணை நடத்தவேண்டும் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ_நெடுமாறன் ஐயா வற்புறுத்தல் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

29 ஆண்டு காலத்திற்கும் மேலாகச் சிறையில் வாடி
மனம் நொந்துப் போயிருக்கும் நளினிக்கும்,
சக சிறைவாசிக்கும்
ஏற்பட்டப் பிரச்சனையின் விளைவாக தற்கொலை_முயற்சியில் ஈடுபட்டதாக வெளியாகியிருக்கும் செய்தி, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இதற்குக் காரணமானவர்கள் யார்? என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்படவேண்டும் என வற்புறுத்துகிறேன்.

உளரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள நளினியை சந்திக்கவும், ஆறுதல் கூறவும் அவருடைய கணவர் மற்றும் குடும்பத்தினரை அனுமதிக்குமாறு அரசை வேண்டிக்கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here