நாளை ஆடி அமாவாசை: கீரிமலை செல்ல கடும் நிபந்தனைகள்!

0
213

முன்னோர்களுக்கு பிதிர்க்கடன் செலுத்தும் முக்கிய நாளான ஆடி அமாவாசை தினமான நாளைய தினம் கீரிமலை புண்ணிய தலத்திற்கு செல்லும் பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல் ஒன்றை வலி வடக்கு பிரதேச சபை விடுத்துள்ளது.

நாளை திங்கட் கிழமை (ஜூலை-20) ஆடி அமாவாசை தினத்தினை முன்னிட்டு பிதிர்க்கடன் நிறைவேற்றும் பொது மக்கள் நாட்டில் நிலவி வரும் அசாதாரண நிலை காரணமாக கொவிட்-19 நோய்த் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கு ஏதுவாக தமதுபிரதேசத்திற்கு அருகில் உள்ள தீர்த்தக்கரையில் பிதிர்க்கடன்களை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அவ்வாறு பிதிர்க்கடன்களை அருகில் நிறைவேற்ற வசதியற்றவர்கள் மட்டும் கீரிமலை தீர்த்தக் கேணியில் நிறைவேற்றுவதற்கு நிபந்தனைகளுடன் அனுமதிக்கபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நிபந்தனைகள் வருமாறு,

பிதிர்கடன்களை நிறைவேற்றுபவர் மட்டும் அனுமதிக்கப்படுவர். (ஏனையவர்களை அழைத்து வருவதை தவிர்க்கவும்)

கடமை நிறைவேற்றும் குருமார்கள் வலி வடக்கு பிரதேச சபையில் பதிவினை மேற்கொள்ள வேண்டும்.

சகல வியாபாரங்களும் தடை செய்யப்பட்டுள்ளது.

கட்டாயம் முகக் கவசம் அணிந்து வரவேண்டும்.

கீரிமலை தீர்த்தக் கேணிக்குள் பிரவேசிப்பதற்கு முன்னர் உடல் வெப்ப நிலையினை பரிசோதிப்பதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் பரிசோதனை செய்த பின்பே உட்பிரவேசிக்க அனுமதிக்கப்படுவர்.

பிதிர்கடன் நிறைவேற்ற வருவோர் உள்நுழைவதற்கு முன் பதிவினை மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் கட்டாயமாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

குறிப்பிட்ட நேரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவினரே உள்வாங்கப்படுவார்கள்.

என வலி வடக்கு பிரதேச சபை சார்பில் விடுக்கப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here