லண்டனில் வெம்பிளி, ஹரோ , பினர் என்று பல இடங்களில் குறிப்பிட்ட ஒரு கும்பல் விலை உயர்ந்த மகிழுந்துகளை பட்டப் பகலில் கொள்ளையடித்து வருகிறார்கள். ஒரு விலை உயர்ந்த மகிழுந்தை வீதியில் கண்டவுடன். அதனை ஒரு பெண் ஓட்டிச் சென்றால் இன்னும் ஆபத்து. அவரை பின் தொடர்ந்து வரும் 4 பேர் கொண்ட குழு. மகிழுந்தை தரிப்பிடத்தில் நிறுத்தும்போது , கிட்ட வந்து தாக்கிவிட்டு சாவியை எடுத்துக் கொண்டு மகிழுந்தை களவாடிச் செல்கிறார்கள்.
கடந்த 7 நாட்களில் மட்டும் 5 தடவை இது போல நடந்துள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ள அதேவேளை. ஒரே கும்பல் தான் இதனை தொடர்சியாக செய்து வருவதாகவும் கூறியுள்ளார்கள்.
தற்போது பொது மக்களின் உதவியை காவல்துறையினர் நாடியுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.