கடந்த வருடத்தில் மாத்திரம் கிளிநொச்சி மாவட்டத்தில் 278வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும் அதில் ஆண்களே அதிகளவானோர் 232 ஆண்களும் 46பெண்களும் பதிவாகியுள்ளனர். விபத்துக்களில் பதிவாகுபவர்களில் 30வயதுக்குட்பட்டவர்களே அதிகளவு பதிவாகதாகவும் மாவட்ட அரசாங்கதிபர் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் அதிகரித்த வீதி விபத்துக்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் தொடர்பாக ஆராய்யப்பட்டது. குறிப்பாக கட்டாக்காலியாக திரியும் கால்நடைகள், அதிகரித்த பாரஊர்திகளின் போக்குவரத்து, சேதமடைந்த வீதிகள், வீதி சமிச்சைகளை பின்பற்றாமல் பயணிப்பது இவற்றை தடுப்பதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கை தொடர்பாக ஆராய்யப்பட்டது.
கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலீஸ்மா அதிபர் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பொலீஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைப்பணிப்பாளர், மாவட்ட பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி, சத்திரசிகிச்சை நிபுணர், வீதி அபிவிருத்தி திணைக்களப்பொறியியலாளர், பிரதேச செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை தெரிவித்தனர்.
கலந்துரையாடல் நிறைவடைந்ததும் அரசாங்கதிபர் கருத்து தெரிவித்தார். மாவட்டத்தில் கடந்த ஆண்டு 278விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும் இதில் அதிகளவு ஆண்களே விபத்துக்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் விபத்துக்களை குறைப்பது தொடர்பாகவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக குழுவொன்றை அமைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்