கொரோனா தொற்று பீதி: யாழ். பல்கலை – கிளிநொச்சி வளாகம் முடக்கம்!

0
304


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகர் வளாகத்தின் அனைத்துப் பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால் முடக்கப்பட்டிருக்கிறது.

வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும் நேற்று திங்கட்கிழமை (ஜூலை 13) மாலை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொற்றுச் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்த பரீட்சைகள் உள்பட அனைத்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கடமைபுரியும் கம்பஹாவைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவர் கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரின் சகோதரன் ஆவார். அவர் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றி வரும் ஒரு இராணுவ சிப்பாய் ஆவார்.

அவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, கம்பஹாவில் உள்ள சுகாதாரத் திணைக்களத்திலிருந்து கிளிநொச்சி பிராந்திய சுகாதாரத் திணைக்களத்துக்கு உத்தியோக பூர்வமாகத் தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது.

அந்தத் தகவலின் அடிப்படையில், தொற்றுக்குள்ளான இராணுவச் சிப்பாயின் சகோதரி கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொழில் நுட்ப பீடத்தில் கல்வி பயில்வதனால், கிளிநொச்சி வளாகம் மூடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here