கடந்த மே மாதம் 14ம் திகதி இயக்குனர் களஞ்சியம் அவர்கள் தமிழ்நாட்டில் சுமந்திரனின் உருவப் பொம்மைக்கு செருப்படி வழங்கி எரித்தார்.
உடனே சிறிலங்காப் புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர்கள் களஞ்சியம் அவர்களை போனில் தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளனர் என அறிய வருகிறது.
“எமக்கு தமிழ்நாட்டில் 200 பேர் இருக்கிறார்கள். கருணா அம்மானுக்கு 300 பேர் இருக்கிறார்கள். எல்லோரும் சேர்ந்து உன்னை தூக்குவோம்” என்று களஞ்சியம் அவர்களை கொச்சைத் தமிழில் மிரட்டியுள்ளனராம்.
இதைவிட தமிழக கியு பிரிவு பொலிஸ் “தேவையானால் மோடியின்ரை உருவப் பொம்மையை கொளுத்துங்க. ஆனால் சுமந்திரன் உருவப் பொம்மையை மட்டும் கொளுத்தாதீங்க” என்று கேட்கிறார்களாம்.
சுமந்திரன் உருவப் பொம்மை எரித்தமைக்கு நேரடியாக வழக்கு போட முடியாததால் கொரோனோவில் வீட்டை விட்டு வெளியேறியது குற்றம் என்று வழக்கு போடுகிறார்களாம்.
இப்போது எமது கேள்வி என்னவெனில் சுமந்திரன் தமிழர் தலைவர் என்றால் அவரது உருவப் பொம்மை எரிக்கப்பட்டமைக்கு தமிழ் மக்கள்தானே எரிச்சல்பட வேண்டும். ஏன் சிறிலங்கா, இந்திய அரசுகள் எரிச்சல் அடைகின்றன?
சிறிலங்கா, இந்திய அரசுகள் தாம் நேரடியாக செய்ய முடியாததை சுமந்திரன் மூலம் சாதிக்க முனைகின்றன என்பதே இதன் அர்த்தம் ஆகும்.
எனவேதான் சுமந்திரன் தோல்வியுற்றால் மீண்டும் தமிழ் தேசிய உணர்வு மேலோங்கிவிடும் என இவ் அரசுகளின் புலனாய்வு அமைப்புகள் அச்சமடைகின்றன.
குறிப்பு- இயக்கனர் களஞ்சியம் அவர்கள் நான் எழதிய “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்னும் நூலை பெற்றுக்கொண்டபோது எடுத்த படம். இந்த படத்தை பார்த்ததும் இதற்காக இன்னொருமுறை களஞ்சியத்தை கியூ பிரிவினர் விசாரிக்கப் போகிறார்கள்? பாவம் மனுசன்.
தோழர் பாலன்.