இன்றும் நாளையும் பிரான்சின் அனைத்து வீதிகளிலும் பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறையின் இரண்டாவது வார இறுதியான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் வீதிகளில் பலத்த நெரிசல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இன்று சனிக்கிழமை நாடு முழுவதும் ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இல் து பிரான்ஸ் மாகாணத்துக்குள் வெளிச்செல்லும் வீதிகளுக்கு மாத்திரம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இல் து பிரான்சுக்குள் நேற்று வெள்ளிக்கிழமையும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குறிப்பாக A10, A7, A9 வீதிகள் பலத்த நெருக்கடியை சந்திக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.