வடக்கில் இனி முகக்கவசம் அணியாவிட்டால் சட்ட நடவடிக்கை!

0
154

வடமாகாணத்தின் பல இடங்களில் பொதுமக்கள முகக் கவசம் அணியாது நடமாடுவது அவதானிக்கப்பட்டு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இனிவரும் நாட்களில் மிகவும் இறுக்கமாக கண்காணிக்கப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்”

இவ்வாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும்,

“நாட்டில் கொரோனா நோய் தொடர்பான அபாயம் தொடர்ந்தும் இருப்பதால் மக்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே செல்லும் பொழுது முகக் கவசம் அணிவதும், குறைந்தது இருவருக்கிடையில் 1 மீற்றர் இடைவெளியை பேணுவதும், சரியான முறையில் கைகளை அடிக்கடி கழுவுவதும் பொதுச் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளாக கைக்கொள்ளப்பட்டு வருகின்றன.

மக்கள் வீட்டிற்கு வெளியில் செல்லும்போதும், பொது இடங்கள் மற்றும் பொது நிகழ்வுகளுக்கு வருகை தரும் பொழுதும், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே மக்கள் பொது இடங்களில் நடமாடும்போது கட்டாயமாக முககவசம் அணிவதை உறுதிப்படுத்துவதன் மூலம் தங்களையும் தங்கள் சமூகத்தினையும் கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதுடன் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here