யூலை ஐந்து ஒரு நெருப்பு
மில்லர் எனும் கரும்பறவை
அந்த நாளில் இவன் அருகே
நின்ற அந்தக்களம் இன்றுவரை
நினைவில் மீளாத நாளாக
என்னுள் உறங்கிக்கொண்டே
இருக்கின்றது கைகுலுக்கி போனவன்
கண்ணெதிரே கரும்புலியாக
அந்த நெல்லியடி மண்ணில் வெடித்து
காற்றோடு கலந்தான் பிரபா அண்ணாவின்
தலைமையில் மடிந்த முதற்கரும்புலி
மில்லர்தான் அந்த வெற்றிகரமான
தாக்குதலை நெறிப்படுத்திய விதம்
பிரபா அண்ணாவை இன்றுவரை
நினைக்க வைக்கிறது. காலம் தந்த
அற்புதமான கரும்புலிகளை
நெஞ்சில் நிறுத்தி வணங்குகிறேன்……………
(குறித்த ஓவியத்தை தனது மனத்தில் இருந்த கற்பனையில் இடைத்தங்கல் நாடு ஒன்றில் இருந்து எந்த கணனி வசதிகள் அற்ற வேளையில் குறித்த உறவு வரைந்தமையை எமது எரிமலை ஊடகத்துகுத் தெரிவித்திருந்தார்.)
(புலத்தில் இருந்து உறவொன்றின் குரல்)