தமிழினப் படுகொலை நாள் மே 18 ஐ நினைவுகூரும் பொருட்டு பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் அனுசரணையில், பிரெஞ்சு நாடாளுமன்றம் அமைந்துள்ள அன்வலிற் ( Place de la Invalides) பகுதியில் தமிழினப்படுகொலை ஆவணப் புகைப்படக் கண்காட்சியடங்கிய கவனயீரப்பு நிகழ்வு கடந்த யூன் முதலாம் நாள் திங்கட்கிழமையும் நேற்று செவ்வாய்க்கிழமையும் இடம்பெற்றது. குறித்த கண்காட்சியை வெளிநாட்டவர்கள் ஆர்வத்துடன் பாரத்து கேட்டறிந்து செல்கின்றனர். அத்துடன் அவர்களுக்கான பிரெஞ்சு மொழியிலான துண்டுப்பிரசுரங்களும் செயற்பாட்டாளர்களால் வழங்கப்படுகின்றன.
இன்று புதன்கிழமை பாரிசின் முக்கிய நகரான பஸ்ரில் (Bastille) பகுதியில் குறித்த கண்காட்சி காலை 10 மணிமுதல் மாலை 17.00 மணிவரை நடைபெறுகின்றது எனவும் மீண்டும் நாளை வியாழக்கிழமையும் மறுநாள் யூன் ஐந்தாம் நாள் வெள்ளிக்கிழமையும் காலை 10 மணிமுதல் மாலை 17.00 மணிவரை பிரெஞ்சு நாடாளுமன்றம் அமைந்துள்ள அன்வலிற் ( Place de la Invalides) இடம்பெறவுள்ளது.
இதன் தொடர்ச்சியாக வரும் யூன் மாதம் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 29 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாவதை முன்னிட்டு யூன் 15 ஆம் நாள் முதல் யூன் 26 ஆம் நாள் வரை தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டி குறித்த தமிழினப்படுகொலை ஆவணப் புகைப்படக் கண்காட்சியடங்கிய கவனயீர்ப்பு நிகழ்வு ஜெனிவா ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் இடம்பெறவுள்ளது.
Home
சிறப்பு செய்திகள் பிரான்சில் மூன்றாவது நாளாகத் தொடரும் தமிழினப்படுகொலை ஆவணப் புகைப்படக் கண்காட்சியடங்கிய கவனயீர்ப்பு!