வரலாற்று சிறப்பு மிக்க யாழ் நயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலய மஹோற்சவத்தின் முத்தேர் திருவிழா இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.

ஸ்ரீ நயினை நாகபூசனி அம்மனுக்கும்,வசந்தமண்டபத்தில் அருள்பாலித்து கொண்டிருக்கும் விநாயகர் மற்றும் முருகன் வள்ளி தெய்வானை சக தெய்வங்களுக்கு விசேட அபிசேகங்கள் ஆராதனைகள் என்பன இடம்பெற்றன.

இதனையடுத்து உள்வீதியுடாக வலம் வந்து காலை 06 மணியளவில் வெளிவீதி வந்து 07 மணியளவில் நாகபூசனி அம்மன் மஹோற்சவ தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இம் மஹோற்சவ கொடியேற்றம் கடந்த மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகி இன்று இரதோற்சவமும், நாளை தீர்த்த உற்சவத்துடன் இனிதே மஹோற்சவம் நிறைவடையும்.

தற்போது நாட்டில் எற்பட்ட கொரோனா வைரஸ் காரணமாக பெரும் அளவான பக்தர்கள் ஆலயத்தில் கலந்துகொள்ளவில்லை. தீவக மக்களும், மற்றும் ஆலய சுற்றுப்புற மக்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.