
கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்திக்கு அண்மையில் நேற்று (29.06.2020) திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி இன்று செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.
கிராஞ்சி பூநகரியைச் சேர்ந்தவரும் யூனியன் குளம் கோணாவில் பகுதியில் வசித்தவருமான மூன்று பிள்ளைகளின் தந்தையான வடிவேல் குணேஸ் (வயது 41) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
வீதியில் நடந்து சென்றவரை வேகமாக வந்த உந்துருளி மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவருடைய மனைவி ஆசிரியப் பணியாற்றி வருகிறார். இவரின் இழப்பினால் கிராமமே சோகமாக உள்ளது. தகவல் அறிந்த உறவினர்கள், நண்பர்கள் தமது அதிர்ச்சியை சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து வருகின்றார்கள்.
(எரிமலையின் செய்திப் பிரிவு)
