
பிரான்சு சேர்ஜி நகரில் வாழ் தமிழ் மக்களின் நிதியில் நேற்று சனிக்கிழமை தமிழ்க் கலாச்சார இணையம் பிரான்ஸ் அமைப்பின் மூலம் வட்டக்கச்சி மகாவித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்கும் பொருளாதார உதவியற்ற மாணவர் ஒருவருக்கு பாடசாலை செல்வதற்கு மிதியுந்து வழங்கிவைக்கப்பட்டது. குறித்த மாணவன் தரம் 5 புலமைப் பரிசில் தேர்வில் 196 புள்ளிகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த மாணவன் தனக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், தன்போன்ற மாணவர்களுக்கு உதவவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

பிரான்சு சேர்ஜி நகரில் வாழ் தமிழ் மக்களின் நிதியில் கடந்த மாதம் வெள்ளிக்கிழமை தமிழ்க் கலாச்சார இணையம் பிரான்ஸ் அமைப்பின் மூலம் பாண்டியன்குளம் சிவயோகசுவாமிகள் அறநெறிப் பாடசாலையின் நெறிப்படுத்தலில் தாயகத்தில்
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தைகிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிறாட்டிகுளம், மூன்றுமுறிப்பு கிராமசேவகர் பிரிவில் உள்ள பொருளாதார வறுமை மிக்க 63 குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணப் பொதிகளை வழங்கிவைைத்ததன் தொடர்ச்சியாகவே இந்த மிதியுந்து வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(எரிமலையின் செய்திப் பிரிவு)