நயினாதீவிற்கு செல்வதற்காக புதிதாக கொண்டுவரப்பட்ட அனுமதிப் பத்திர (பாஸ்) நடைமுறை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டினை அடுத்து நீக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நேற்றையதினம் யாழ் மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபருடன் இவ்விடயம் தொடர்பில் தொலைபேசியில் வினவியது. இதன்போது அவ்வாறான எந்த அனுமதிப் பத்திர நடமுறை மற்றும் மட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என பிரதி காவல்துறை மா அதிபரால் ஆணைக்குழுவுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் அது தொடர்பில் உடனடியாவே நயினாதீவு மற்றும் குறிகாட்டுவான் உப காவல்துறை நிலையங்களுக்கு அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.