கொரோனா நோய் தொற்றையடுத்து உலகளாவிய பொருளாதாரத்துடன் சிறிலங்காவையும் தொடர்புபடுத்தும் வகையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதன் பயணிகள் விண்ணுந்தை சரக்கு விண்ணுந்தாக மாற்றியமைத்துள்ளது.
மாற்றியமைக்கப்பட்ட எயார் பஸ் 330 விண்ணுந்து நேற்று தூரக்கிழக்கு மற்றும் ஐரோப்பாவுக்கு அதன் செயற்பாட்டை ஆரம்பித்தது. விண்ணுந்தின் மொத்த கொள்வனவான 170 கியூபிக் மீற்றரில், மேல் தட்டில் 60 கியூபிக் மீற்றரும் கீழ் தட்டில் 110 கியூபிக் மீற்றரிலும் மொத்தம் 45 மெட்ரிக் தொன் சரக்குகள் எடுத்துச் செல்லப்படும்.
ஸ்ரீலங்கள் எயார் லைன்ஸ் தற்போது வேறு சரக்கு விண்ணுந்துகள் மூலம் ஐரோப்பா, மத்திய கிழக்கு, அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் தூரக் கிழக்கு வாடிக்கையாளர்களின் சரக்குகளை ஏற்றிச் செல்வது குறிப்பிடத்தக்கது.