“கோட்டாபய அரசாங்கம் ஒரே இனம், ஒரே மொழி, ஒரே மதம் என்ற கொள்கையைக் கடைப்பிடிக்கின்றது. அதாவது சிங்கள இனம், சிங்கள மொழி, பௌத்த மதம் என்ற நிலையில் செல்கின்றது. இதனால், ஏனைய இனத்தவர்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இலங்கையை சிங்கள பௌத்த குடியரசு என மாற்றுவதற்கான உத்வேகம் இந்த அரசுக்கு இருப்பதாக அறிகின்றேன்” எனக் கூறுகின்றார் தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன். கொழும்பு இணைய ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் இதனை அவர் கூறியிருக்கின்றார்.
Home
சிறப்பு செய்திகள் இலங்கையை சிங்கள பௌத்த குடியரசு என மாற்றும் உத்வேகம் கோத்தா அரசிடம் உள்ளது:மனோ!