பளை – முகமாலை பகுதியில் இன்று (20) மாலை 6.15 மணியளவில் மணல் ஏற்றிச் சென்ற வாகனம் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிாசூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு 1 மணி நேரத்திற்கும் மேலாக வைத்தியசாலையில் மருத்துவர் இல்லாமையால் காத்திருந்த நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இதன்போது தென்மராட்சி – கெற்பேலியை சேர்ந்த திரவியம் இராமலிங்கம் (24-வயது) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
தற்போது பளை வைத்தியசாலை வளாகத்தில் பொதுமக்கள் கூடியதால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டது.
இதேவேளை, இராணுவச் சிப்பாயை உந்துருளியால் மோதிவிட்டுச் சென்ற இளைஞர் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்று பளை பொலிஸார் இராணுவத்தினரின் செயலை நியாயப்படுத்தியுள்ளனர்..
அத்தோடு சட்டத்துக்கு புறம்பாக மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பளை பொலிஸார் கூறினர்.
இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 24 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று மாலை 6.15 மணியளவில் முகமாலையில் இடம்பெற்றது.
சம்பவத்தில் கெற்பெலியைச் சேர்ந்த திரவியம் இராமலிங்கம் (வயது -24) என்ற இளைஞன் உயிரிழந்தார்.
சம்பவத்தையடுத்து பளை வைத்தியசாலை முன்பாக கூடிய உயிரிழந்தவரின் ஊர் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏ-9 வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டது.
ஆர்ப்பாட்டக்காரர்களை அப்புறப்படுத்துவதில் பொலிஸார் பெரும் முயற்சிகளை முன்னெடுத்தனர்.
“கிளாலிக்கு அண்மையாக முகமாலை இராணுவ முகாமுக்கு பின்புறமாக இன்று மாலை சட்டத்துக்கு புறம்பாக மணல் அகழ்வில் 4 பேர் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு பொலிஸாரின் நடமாட்டத்தை உளவு பார்க்கும் பணியில் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.
உளவுபார்ப்பவர் உந்துருளியில் அந்தப் பகுதியில் நடமாடுவதை அறிந்த இராணுவத்தினர் அவரை மறிக்க முற்பட்டனர். எனினும் அவர் இராணுவத்தினரை உந்துருளியால் மோதிவிட்டுச் சென்றுள்ளார்.
உந்துருளியால் மோதுண்டு நிலத்தில் வீழ்ந்த இராணுவச் சிப்பாய் இளைஞர் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளார். அதன்போதே இளைஞர் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
சம்பவத்தையடுத்து சட்டத்துக்கு புறம்பாக மணல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று பளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ஆயினும் குறித்த சம்பவத்தின் உண்மைத் தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை.
இளைஞன் இராணுவத்தால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏ-9 வீதியை மறித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட இளைஞனின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.