சிறிலங்கா காவல்துறையின் மற்றொரு யாழ்.இளைஞன் சடலமாக மீட்பு!

0
400

யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரும் சிறிலங்கா காவல்துறையின் தேசிய புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தருமான இளைஞர் ஒருவர் கைத் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனை காவல் நிலையத்தில் உள்ள சிறிலங்கா தேசிய புலனாய்வுச் சேவை காரியாலயத்திலேயே நேற்று (19. 06.2020) வெள்ளிக்கிழமை மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

இதன்போது யாழ்ப்பாணம் – நெல்லியடியைச் சேர்ந்த கமல்ராஜ் (வயது 21) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here