இந்தியா மற்றும் சீனாவின் எல்லைப் பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இடம்பெற்ற மோதலில் இந்திய தரப்பில் 20 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்தி ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
அத்துடன் குறித்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் இந்திய இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா-சீன எல்லையில் பதற்றத்தை தணிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று இரவு இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு தரப்பு இராணுவத்தினருக்கும் இடையில் மீண்டும் மோதல் ஏற்பட்டது.
இதில் இந்திய இராணுவம் தரப்பில் இராணுவ அதிகாரியொருவர் உள்ளிட்ட 3 இந்திய இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டமாக செய்திகள் தெரியவந்தது.
இந்நிலையில் இந்திய தரப்பில் 20 பேர் பலியாகியிருப்பதாவும், எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய இராணுவ தகவல்கள் தெரிவித்தன.
அதேவேளையில் சீனா தரப்பில் 43 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவித்துள்ளபோதும் இதன் உண்மைத் தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை.