கடும் வேகத்தில் சென்ற யாழ். மாநகர சபையின் தீ அணைப்பு வாகனத்தின் முன் சக்கர ரயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து மூன்றுமுறை குத்துக்கரணம் அடித்து அருகில் உள்ள காணிக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு அண்மையில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தீ அணைப்பு வாகனத்தில் பயணித்த மூவரில் ஒருவர் பலியான நிலையில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
மூவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டியில் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் அரியரட்ணம் சகாயராஜா (37-வயது) எனும் தீயணைப்பு வீரர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து குறித்த வாகனம் பருத்தித்துறைபக்கமாக சென்றுகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.