வடமராட்சியில் அத்துமீறும் தென்னிலங்கை மீனவர்களைக் கண்டித்து போராட்டம்!

0
395

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் தென் இலங்கை மீனவர்களால் அத்துமீறி கடல் அட்டை பிடிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மீனவர் சங்கங்களின் சமாசத்தால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு முன்பாக நடைபெற்றது.

மீனவர்கள் தமது கடல் வளங்கள் மீன் வளங்கள் என்பன இவர்களினால் அழிக்கப்படுவதாக குற்றம் சுமத்தினர். இதில் மீனவர் சமாசத்தால் மகஜர்கள் சமர்ப்பிக்கப்பட்டன.இப் போராட்டத்தில் மக்களோடு இணைந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், செயலாளர், அமைப்பாளர், மற்றும் சட்ட ஆலோசகர்கள், உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here