பிரான்சு நாட்டின் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் இன்று கொரோனா காலத்தின் 4 ஆவது உரையினை ஆற்றியிருந்தார்.
ஏப்ரல் 13 ஆம் திகதி, மே 11 ஆம் திகதிக்கான மறுசீரமைப்பின் தொடக்கத்தை அறிவித்திருந்த நிலையில் இன்றைய இந்த உரை அமைந்திருந்தது.
உணவகங்கள் யாவும் நாளை முதல் (15.06.2020) திங்கட்கிழமை முதல் வழமை போல் இயக்குவதற்கும் (அதாவது சமூக இடைவெளி அவசியம்) , ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்ய முடியும் என்றும், அதே வேளையில் பாடசாலைகள் அனைத்தும் 22 ஆம் திகதி வழமைக்கு திரும்பும் எனவும் , மாநகரசபைத் தேர்தலுக்கான 2 ம் சுற்று 28 ம் திகதி நடைபெற வேண்டிய மாநகரசபைகளுக்கு மட்டும் நடைபெறும் எனவும் தெரிவித்தார். இதேவேளை திரையரங்குகள், களியாட்ட நிகழ்வுகள் என்பனவற்றிற்கான தடை தொடர்ந்தும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பவும் புத்துயிர் பெறவும் இப்போது நேரத்தை ஒதுக்கி செயற்படவேண்டும். இனவெறி மற்றும் பொலிஸ் வன்முறைக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டில் அணிவகுத்து வருவதாகவும் பொலிசார் கூறும்போது, அதனை எதிர்கொள்ளவேண்டிய நிலைபற்றியும் குறிப்பிட்டார்.
அதிபர் மக்ரோன், உயிரிழந்த பிரெஞ்சுமக்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.முதலில் பிரெஞ்சுமக்களுக்கு நன்றிகளையும் தெரிவித்தார். அத்துடன் “பொறுப்புணர்வைக் காட்டியுள்ள மக்களின் செயலையும் பாராட்டினார்.
தேசத்திற்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காக தொடர்ந்து பணியாற்றியவர்களுக்கும் நன்றி தெரிவித்தார், பராமரிப்பாளர்களுக்கு சிறப்பு அஞ்சலி செலுத்தினார். “எங்கள் தேர்வுகளால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன,” என்று தொடர்ந்துள்ள அவர், எங்களிடம் வளங்கள் உள்ளன என்று காலம் காட்டியது. என்ன செய்யப்பட்டுள்ளது என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்ளலாம், பொருளாதாரக் கண்ணோட்டத்தில் மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பது உள்ளிட்டவைகளை ஒப்புக்கொண்ட அவர் “எங்கள் பலம் பலப்படுத்தப்படும். எங்கள் பலவீனங்களைச் சரிசெய்வோம் என்பதாக அவரது உரை தொடர்ந்தது.