திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் 42 ஏதிலிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி உணவு மறுப்புப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
கடந்த 5 நாட்களாக உணவுமறுப்புத் தொடர்கிறது. ஆனால் இதுவரை தமிழக அரசு எந்தவித பதிலும் அளிக்கவில்லை. ஒரு அதிகாரிகூட அவர்களைச் சென்று சந்திக்கவில்லை.
இந்தக் கொரோனா பிரச்சினை நேரத்திலும்கூட தமிழக அரசு இந்த ஈழத் தமிழ் ஏதிலிகள் மீது இரக்கம் காட்ட மறுக்கிறது.
பொதுவாக தேர்தல் நேரங்களில் அரசியல் தலைவர்கள் மக்களின் பிரச்சினை விடயங்களில் தாமாக முன்வந்து அக்கறை காட்டுவார்கள்.
ஆனால் இலங்கையில் தேர்தல் அறிவித்த இந்த நேரத்திலும்கூட இந்த ஏதிலிகளின் விடுதலைக்கு எந்தவோர் அரசியல் தலைவரும் குரல் கொடுக்கவில்லை.
யாராலுமே கண்டு கொள்ளப்படாதவர்களாக இந்த ஈழத் தமிழ் ஏதிலிகள் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.