பிரான்சில் கடந்த 2019 ஆம் ஆண்டு சாவடைந்தவரும் பொண்டி நகரில் வாழ்ந்து, பிரான்சில் தமிழ் கல்வியை 1993ஆம் ஆண்டுகளில் கற்பித்த முதன்மை ஆசிரியர் களில் ஒருவருமான கதிர்காமநாதன் ஆசிரியர் அவர்களது நினைவாக அவரோடு ttnதொலைக்காட்சியில் பணியாற்றிய சக பணியாளர்களால் எம் தாயக உறவுகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப் பட்டுள்ளன.
கதிர்காமநாதன் ஆசிரியர் நினைவாக
இன்று வவுனியா வடக்கு பிரதேசத்தில் மிகவும் வறிய நிலையில் உள்ள மக்கள் வாழும் கிராமமான காஞ்சுரமோட்டை என்னும் கிராமத்தில் வசிக்கும் இருபத்து இரண்டு குடும்பங்களுக்கும் உலர்உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்தக் கிராமத்தில் வசிக்கும் மக்கள் ஓலைக் குடிசையில் மின்சாரம் இன்றியும் குடி நீருக்காக ஐந்து கிலோமீற்றர் தூரம் நடக்கவேண்டிய நிலையும் உள்ளது.
அத்துடன் போக்கு வரத்து வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் நோய் ஏற்பட்டால் வைத்தியசாலைக்கு செல்வதற்கு வாகன வசதி இல்லாமல் உள்ளனர். பாடசாலைக்கு பத்து கிலோமீற்றர் தூரம் நடக்கவேண்டும். அன்றாட வாழ்வில் அவர்கள் பெரும் இடரான வாழ்வோடு போராடி வருகின்றார்கள் .
இவ்வாறு ஏழ்மையில் வாடும் எம்மக்களுக்கே 11.06.2020 வியாழக்கிழமை உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. கடந்தமாதமும் இவர்களுக்கு தமிழ்க்கலாச்சார இணையம் பிரான்ஸ் அமைப்பின் ஊடாக முதற்கட்டமாக நிவாரணம் வழங்கப்பட்டது.
தாயகத்தில் இருந்து துன்பப்படும் எமது உறவகளுக்காக புலம்பெயர் தேசங்களில் இருந்து உதவிவழங்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நிவாரணப்பொதிகள் கிடைக்கப்பெற்ற மக்கள் நன்றியினைத்தெரிவித்து நிற்கின்றனர்.