தமிழர் தாயகத்தின் தலைநகரான திருகோணமலை மாவட்டத்தில் இலங்கைத்துறை முகத்துவாராம் பிரதேசத்தில் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வழிபட்டு வந்த பெரியசாமி கோவில் முழுமையாக அழிக்கப்பட்டு அந்த கோவில் இருந்த இடத்தில் இப்போது “லங்கா பட்டுன சமுத்திரகிரி” என்கிற பெயரில் புதிய விகாரை ஒன்று கட்டப்பட்டு இருக்கிறது. அதனோடு இணைந்த வகையில் புத்தர் சிலைகளும் நிறுவப்பட்டு இருக்கிறது.
அத்தோடு இலங்கைத்துறை முகத்துவாராம் என்கிற பாரம்பரிய தமிழ் கிராமமும் அபகரிக்கப்பட்டு “லங்கா பட்டுன” என பெயர் இடப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு தபிழர் தாயக பூமிகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப் படுகின்றன.
இவற்றைத் தட்டிக் கேட்க நாதியிழந்து தமிழ்த் தலைமைகள் என்று கூறிக் கொண்டு சிங்களத்தின் கைக்கூலிகளாக இருக்கும் சிறிலங்கா அடிவருடி அரசியல் வாதிகள் தேர்தல் நேரத்தில் தமிழ் மக்களின் வாசல் கதவுகளைத் தட்ட ஆரம்பித்துள்ளார்கள். இவர்களுக்கு தமிழ்மக்கள் தக்க பதிலைக் கொடுக்க முன்வரவேண்டும்.