கனடாவின் மார்க்கம் நகரில் மூன்று பிள்ளைகளின் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த (06.06 2020) சனிக்கிழமை படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான கனடா மார்க்கம் நகரில் வசித்த யாழ். குரும்பசிட்டியைச் சேர்ந்த மதன் மகாலிங்கம் (வயது 45) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
ஸ்டீல்ஸ் வீதி கிழக்கு மார்க்கம் பகுதியில் மேரிடேல் அவென்யூவில் உள்ள ஒரு வீட்டிற்கு வெளியே இவரது சடலம் மீட்கப்பட்டது.
அவரை கொலை செய்தவர்கள் யார் என்பது தெரியவரவில்லை. தொழில் போட்டி காரணமாக கொலை இடம்பெற்றதா என்றும் பொலிசார் விசாரித்து வருகின்றார்கள்.
இவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அறிவித்த யோர்க் பிராந்திய காவல்துறையினர் அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டனர்.
பிறப்பிடமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
(எரிமலையின் செய்திப் பிரிவு)