மட்டக்களப்பு நகர் வேதாரணியம் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த உந்துருளி ஒன்று திடீரென தீப்பற்றியதில் அதனை ஓட்டிச் சென்றவர் உந்துருளியை விட்டு பாய்த்து தப்பித்ததுடன் உந்துருளி தீயில் எரிந்து முற்றாக சேதமடைந்துள்ள சம்பவம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளதாக மட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தைச் சோந்த கடை ஒன்றில் வேலை செய்துவரும் 40 வயதுடையவர் சம்பவதினமான இன்று காலை ஏறாவூர் பிரதேசத்துக்கு உந்துருளியில் சென்று வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது மட்டக்களப்பு தொடருந்து நிலையத்துக்கு பின்னால் உள்ள வேதாரணியம் வீதி வழியக சென்ற போது உந்துருளி திடீரென தீப்பற்றியது.
இதனையடுத்து உந்துருளியை விட்டு பாய்ந்ததுடன் உந்துருளி தீப்பற்றி எரிந்து சேதமடைந்துள்ளது இந்தப் பகுதிக்கு விரைந்த பொலிசார் சென்று தீயைக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.