லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம்: பெண் பொலிஸார் படுகாயம்;பிரிஸ்டல் சிலை தகர்ப்பு!

0
440

லண்டனில் நேற்று மாலை வரை பெரும் ஆர்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளது. நேற்று மதியம் ஆரம்பித்த ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு. அமெரிக்காவுக்குத் தமது எதிர்ப்பை வெளியிட்டார்கள். அமெரிக்க தூதுவராலயத்தின் முன்னால் கூடிய மக்கள், மத்திய லண்டனையே ஸ்தம்பிக்கச் செய்தார்கள். வழமைபோல இந்த ஆர்ப்பாட்டமும் இறுதியில் கலவரமாக முடிவுற்றுள்ளது

லண்டனில் அமைந்திருந்த பிரிஸ்டல் சிலை என்று அழைக்கப்படும், பிலன்ரோபிஸ்ட் எட்வாட் என்பவரின் 17ம் நூற்றாண்டு சிலையை கறுப்பினத்தவர்கள் உடைத்து. நிலத்தில் வீழ்த்தி அதற்கு சிகப்பு நிற சாயம் பூசி, பின்னர் தேம்ஸ் ஆற்றில் தூக்கி வீசியுள்ளார்கள். இந்த எட்வாட் தான் 17ம் நூற்றாண்டில், பிரித்தானியாவில் பல அடிமைகளை கொண்டு வந்தர். மேலும் அடிமைகளை அவர் தான் காசுக்கு விற்று மற்றும் வாங்கி வந்தார்.

இதன் காரணமாக தான் ஆர்பாட்டக்காரர்கள் இந்த சிலையை உடைத்துள்ளார்கள் எனத் தெரிகிறது.

இந்நிலையில்,

லண்டனில் பிரதமர் இல்லம் அருகாமையில் நடந்த இனவெறிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில்,குதிரையில் வலம்வந்த பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குதிரைப்படையை சேர்ந்த அந்த அதிகாரி திட்டமிட்டு வீழ்த்தப்பட்டதாக பொலிஸ் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளன.இதில்,அந்த பொலிஸ் அதிகாரியின் நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விலா எலும்புகள் நொறுங்கியுள்ளதாகவும் மட்டுமன்றி தோள்பட்டை எலும்பும் உடைந்துள்ளது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.குறித்த பெண் அதிகாரி காயங்களில் இருந்து மீண்டுவர சுமார்
4 மாதங்களுக்கு மேல் ஆகும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.அந்த பொலிஸ் அதிகாரியின் குதிரையை ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் வேண்டும் என்றே எரிச்சலூட்டியதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி,அந்த குதிரை மீது மிதிவண்டி உள்ளிட்டவைகளை தூக்கி வீசியதாகவும், அதனாலையே அது மிரண்டு, பொலிஸ் அதிகாரியை கீழே தள்ளிவிட்டுள்ளது என வீடியோ காட்சிகளில் பதிவாகியுள்ளது.சனிக்கிழமை நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பொலிஸ் தரப்பில் குறித்த பெண் பொலிஸ் அதிகாரி உட்பட 14 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here