தொடர்ந்து ஓட முடியாது நின்ற போது ஒரு பொலிசார் சிவகுமாரனை நெருங்கி விட்டார். சிவகுமாரன் அவரது துப்பாக்கியை பறித்து அவரை சுட முயன்றார். அப்போது அந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் , “எனக்கு மூன்று பிள்ளைகள் , அவர்களின் தாயாரும் இறந்துவிட்டார். நானும் இறந்தால் அவர்கள் மூவரும் அனாதைகள் ஆகிவிடுவார்கள் ” என கெஞ்சினார். அதனால் அந்த போலீசாரை சுடாது தன்னிடம் இருந்த சயனைட்ட அருந்தி தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.
சிவகுமாரன் வைத்திய சாலையில் இறந்த பின்னர் அவரது கைக்கடிகாரம் மற்றும் அவரது காற்சட்டையில் இருந்த சிறிய தொகை பணம் என்பவற்றை அவரது தந்தையாரிடம் கையளித்து விட்டு , ” உங்கள் மகன் ஒரு தெய்வ பிறவி அவர் நினைந்திருந்தால் என்னை சுட்டு கொன்று இருக்கலாம் ” என கூறி சிவகுமாரனின் தந்தையின் காலில் விழுந்து வணங்கினாராம் அந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்.
ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதல் தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரன் ஆவார்( 05.06.1974)
சிங்கள இனவாதத்தால் தமிழ் மக்களுக்கெதிரான கொடுமைகள் அரங்கேற்றப்பட்டன. தமிழினப் படுகொலைகளும் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டன. இதனால்- தமிழ் மக்களின் சுதந்திர இருப்புக்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகின.
இந்நிலையில் தான் – மாணவனாகவிருந்த தியாகி பொன்.சிவகுமாரன், தமிழ் மக்களின் சுதந்திர இருப்பை உறுதிசெய்வதற்கும்,
சிங்கள பேரினவாத அடக்குமுறையாளர்களின் பிடியிலிருந்து – தமிழினம் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டான்.
யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் சயனைட் நஞ்சருந்தி 05.06.1974 மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் சயனைட் அருந்தி உயிர் நீத்தவர் இவரே.