விட்டுக்கொடுக்கும் மாண்பு உயர்ந்தது என்பதற்கு இது சான்று
அமெரிக்காவில் கறுப்பினர் ஒருவரை அநியாயமான முறையில் கொன்ற காவலருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் மண்டியிட்டு போராட்டகாரர்களின் முன்பு மன்னிப்பு கேட்டுள்ளனர். அவர்களும் பெருந்தன்மையுடன் அதனை ஏற்று மன்னித்துவிட்டனர்.
இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் கறுப்பினரை கொன்ற காவலர் ஒரு வெள்ளையர் என தெரிந்தும் அவருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் கணிசமானவர்கள் வெள்ளையர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.