இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகள் இன்று (31.05.2020) ஞாயிற்றுக்கிழமை பூரண அரச மரியாதையுடன் நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் மைதானத்தில் இடம்பெற்றன.
சர்வமதத் தலைவர்களின் ஆத்ம சாந்தி பிரார்த்தனை உரைகள் முக்கிய பிரமுகர்களின் சார்பாகவும் இரங்கலுரையாற்றினர்.
அமரா் ஆறுமுகனின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்ள பொதுமக்களுக்கு அனுமதியில்லாத நிலையில் நோர்வூட் மைதானத்தை சூழவுள்ள தேயிலை மலைகளில் ஆயிரக்கணக்கானோர் குழுமி நின்று அமரருக்கு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.