தொடரும் புறநானூறு…. கொறோனா கால உள்ளிருப்பில் தொடர்பாடல் வசதியூடு பிறந்திட்ட புதிய எண்ணக்கரு. கலைஞர்கள் அவரவர் வீடுகளில் இருந்தபடியே ஒரு நாடகத்தை புதியவடிவில் ஒலிக்கவிட்ட நாடக உலகின் புத்தம்புது முயற்சி.
காயலையில் (skype) பிரான்சில் தமிழியல் பட்டப்படிப்பு மாணவர்கள் 17/05/2020 அன்று முள்ளிவாய்க்கால் நினைவுக்காய் வானலையில் நிகழ்த்திய நாடகம். இன்று ஒளிச்சேர்க்கைகளுடன் வலையொளியில் (youtube) வலம்வரத் தொடங்கியுள்ளது.
இந்நாடகத்தை 50 இற்கும் மேற்பட்ட அறிஞர்கள் பிரான்சு, பிரித்தானியா, தமிழ்நாடு, ஈழம் எனப் பல்வேறு நாடுகளில் இருந்து நேரலையில் கேட்டதோடு கருத்துரைத்தும் இருந்தனர்.புலம்பெயர் ஊடகங்களில் மட்டுமல்லாது தாயக ஊடகங்களிலும் தனியிடம் பெற்ற நாடக முயற்சி… இதோ உங்களின் பார்வைக்காக…