பிரான்சில் தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தால் 4 ஆவது ஆண்டாக நடாத்தப்படும் இசைவேள்வி கர்நாடக சங்கீதப்போட்டி 30.05.2015 சனிக்கிழமையும் 31.05.2015 ஞாயிற்றுக்கிழமையும் பொண்டி தமிழ்ச்சோலை மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வுகளில் மாவீரர் நினைவு ஈகைச்சுடரினை 2008 ல் மன்னாரில் வீரச்சாவைத்தழுவிக் கொண்ட லெப்ரினன்ட் தமிழ்ப்பிரியாவின் சகோதரர் மற்றும் 1998 இல் ஒட்டுசுட்டானில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட வீரவேங்கை புரட்சிமுதல்வனின் சகோதரர் ஆகியோர் ஏற்றிவைத்தனர்.
அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து. நிகழ்வுகளுக்கான மங்கள விளக்கேற்றலினை தமிழர் கலைபண்பாட்டுக்கழக பொறுப்பாளர் திரு. சுதர்சன், இசைவேள்வி கர்நாடக சங்கீதப்போட்டி ஒருங்கமைப்பாளரும் மிருதங்க ஆசிரியருமான திரு.கட்சன், பிரான்சு தமிழர் கலை பண்பாட்டுக்கழக உறுப்பினர் திருமதி பூபதி நந்தகுமார் ஆகியோரும், இப்போட்டியின் நடுவர்களாக கலந்துகொண்ட பிரித்தானியாவிலிருந்து வருகைதந்த நுண்கலைப் பட்டதாரி திருமதி எஸ். சுதாமதி, நெதர்லாந்திலிருந்து வருகைதந்த நுண்கலைப் பட்டதாரி திருமதி எஸ். செல்வமதி, நுண்கலைப் பட்டதாரி இசைக்கலைமணி ஆசிரியர் திரு.க.சேயோன் (பிரான்சு) அவர்கள், கலாசேத்திரம் ஜி.ஜெனிற்றா (பிரான்சு) ஆகியோர் ஏற்றிவைத்து நிகழ்வினை ஆரம்பித்துவைத்தனர்.
ஆரம்ப நிகழ்வில் வரவேற்புரையையும், விதிமுறைகளையும், கர்நாடக சங்கீத ஒழுங்கமைப்பாளர் திரு. கட்சன் அவர்கள் வழங்கியிருந்தார். அறிவிப்பாளர் திரு.குருபரன் அவர்கள் நிகழ்ச்சித் தொகுப்பினை வழங்கினார். பங்குபற்றிய போட்டியாளர்கள், ஆசிரியர்கள் அனைவரையும் வரவேற்றுக்கொண்டதோடு, நடுவர்களை தமிழர் கலைபண்பாட்டுக்கழக பொறுப்பாளர் மதிப்பளித்துவைத்துப் போட்டிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
போட்டிகள் முறையே வயலின், வீணை, மிருதங்கம், வாய்ப்பாட்டு, தனி, குழு என நடைபெற்றன. அனைத்து போட்டிகளும் நடுவர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் விருந்தாக அமைந்திருந்தன. மாணவர்களும், அவர்களின் ஆசிரியர்களும் மிகவும் உற்சாகமாக போட்டிகளில் கலந்துகொண்டிருந்தனர். இம்முறை அனைத்துப்போட்டிகளும் பக்கவாத்தியங்கள் சகிதம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் நிறைவில் நடுவர்கள் நிகழ்வில் தாம்பெற்ற அனுபவங்கள் தொடர்பான தமது உள்ளக்கிடக்கைகளை அனைவருடனும் பகிர்ந்துகொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கான பரிசில்களையும், சான்றிதழ்களையும் மற்றும் பங்குபற்றிய போட்டியாளர்களுக்கான சான்றிதழ்களையும் போட்டியின் நடுவர்கள் மற்றும் உறுப்பினர்கள் வழங்கி மதிப்பளிப்புச் செய்திருந்தனர்.
இம்முறை முதல்முறையாக போட்டியில் மிகச் சிறந்த போட்டியாளர் தெரிவுசெய்யப்பட்டு ‘இசைத்துளிர்” கிண்ணம் வழங்கப்பட்டது.
கீதாலயம் இசைப்பள்ளி ஆசிரியை அம்பிகை பாலக்குமார் அவர்களின் மாணவி செல்வி தீபனி மதனராஜா சின்னத்துரை 2015 இசைவேள்வியின் ‘இசைத்துளிர்” ஆகத் தெரிவுசெய்யப்பட்டு ‘இசைத்துளிர்” கிண்ணம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்.
கிண்ணத்தைப் பெற்றுக்கொண்ட அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது கலைப்பயணத்துக்குத் துணைநின்ற ஆசிரியர்களுக்கும் ஏனையவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
இசைவேள்வி கர்நாடக சங்கீதப்போட்டி ஒருங்கமைப்பாளரும் மிருதங்க ஆசிரியருமான திரு.கட்சன் அவர்கள் ‘இசைத் துளிர்” தொடர்பான கருத்துக்களை அரங்கில் முன்வைத்தார். அதாவது துளிர் என்பது ஒரு விருட்சத்தின் ஆரம்பம் எனவும் துளிர் விருட்சமான பின்பும் துளிர்கள் உருவாகிக் கொண்டதான் இருக்கும். ஒரு விருட்சத்தில் துளிர் இருக்கும்போதே அது பசுமையாக இருக்கும். அவ்வாறு இந்த மாணவர்களும் துளிர்போன்று இருக்கவேண்டும் என்று தெரிவித்த அவர், ‘இசைத்துளிர்” மதிப்பை 3 தடவைகள் ஒருவர் பெற்றுக்கொள்ளமுடியும் அவ்வாறு பெற்றுக்கொண்டபின்னர் அவர் போட்டிகளில் கலந்துகொள்ளமுடியாது என்றும் தெளிவுபடுத்தினார்.
நிகழ்வுகளின் நிறைவாக நன்றியுரைக்கப்பட்டு, 2015 இசைவேள்வி கர்நாடக சங்கீதப்போட்டி சிறப்பாக நிறைவடைந்தது.
போட்டிகள் முடிவுகளும், வெற்றிபெற்ற போட்டியும், போட்டியாளர்களும் :-
கீழ்ப்பிரிவு குரலிசை
1ம் இடம்: மதிவாணன் அஷ்விதா
2ம் இடம் : சத்தியநாதன் அமலியா
3ம் இடம் : சுரேஸ்குமார் சங்கீதன்
மத்தியபிரிவு குரலிசை
1ம் இடம் : சிவலோகநாதன் சுபாங்கி
2ம் இடம் : ஸ்ரீசுதேஸ்கரன் வருஷினி
3ம் இடம் : ஸ்ரீதரன் ஆரபி
3ம் இடம் : மதிவாணன் ஆயினி
மேற்பிரிவு குரலிசை
1ம் இடம் : சிவானந்தராஜா ராம்
2ம் இடம் : வைஷ்ணவி தனசிங்கம்
3ம் இடம் : லோகேந்திரன் துவாரகா
3ம் இடம் : சிவானந்தராஜா ஆரபி
அதிமேற்ப்பிரிவு குரலிசை
1ம் இடம் :சோதிராசா சோனா
2ம் இடம் : கோகுலதாஸ் சூரியா
3ம் இடம் : எட்வேட் லூயிஸ் அனோஜினி
அதிஅதிமேற்பிரிவு குரலிசை
1ம் இடம் : சிவலோகநாதன் நிஷாங்கனி
2ம் இடம் : தவராஜன் மயுந்தினி
3ம் இடம் : அருந்தவராஜா அஜித்
வயலின் கீழ்ப் பிரிவு (9வயதின்கீழ்)
1ம் இடம் : ராம்குமார் ராகரன்
2ம் இடம் : மகிந்தன் மிகிஷா
வயலின் மத்திய பிரிவு (12வயதின்கீழ்)
1ம் இடம் : சிவானந்தராஜா குந்தவி
2ம் இடம் : பகிரதன் லக்ஷிகா
3ம் இடம் : அகிலன் அஷ்வின்
வயலின் மேற்பிரிவு (15வயதின்கீழ்)
1ம் இடம் : தேவன் அசிதன்
2ம் இடம் : மயில்வாகனம் அபிராமி
3ம் இடம் : கஜேந்திரன் கவியாழன்
3ம் இடம் : குகன் மிலன்
வயலின் அதிமேற்பிரிவு (18வயதின்கீழ்)
1ம் இடம் : குணரத்தினம் சங்கவி
2ம் இடம் : செல்வக்குமாரன் சிந்தியா
3ம் இடம் : தம்பிராஜா விதுஷா
வயலின் அதிஅதிமேற்பிரிவு (18வயதின்மேல்)
1ம் இடம் : பரமேஸ்வரலிங்கம் பிரகாஷ்
1ம் இடம் : சிவசுதசர்மா ஸைநிகா
1ம் இடம் : திலீப்குமார் தானுகா
மிருதங்கம் மத்தியபிரிவு (12 வயதின் கீழ்)
1ம் இடம் : அகிலன் அபினாஸ்
மிருதங்கம் மேற்பிரிவு (15 வயதின் கீழ்)
1ம் இடம் : சாள்ஸ் கெஸ்ரன் மெல்வின்
2ம் இடம் : முருகதாசன் செமுஷன்
3ம் இடம் : முத்துத்தம்பி; கனாடீபன்
மிருதங்கம் அதிமேற்பிரிவு (18 வயதின் கீழ்)
1ம் இடம் : நித்தியானந்தன் விஷ்னுகரன்
2ம் இடம் : சந்திரசேகரம் அனுஜன்
3ம் இடம் : பாலச்சந்திரன் தசிகரன்
3ம் இடம் : நேசராசா சங்கீர்த்தனன்
மிருதங்கம் அதிஅதிமேற்பிரிவு (18 வயதின் மேல்)
1ம் இடம் : மார்க்கண்டு ஜெனோர்தன்
2ம் இடம் : வின்சன் டிலான்
வீணை அதிஅதிமேற்பிரிவு
1ம் இடம் : நடராஜா பிருந்தா
2ம் இடம்; : நடராஜா பானுஜா
வீணை (குழு)
1ம் இடம் : உபாசனா
வயலின் ( குழு) கீழ்ப்பிரிவு
1ம் இடம் : அம்பாள் இசைப்பள்ளி
2ம் இடம்; : நொய்சிலுகுறோன் 2 தமிழ்ச்சோலை
3ம் இடம் : ஓல்னேசுபுவா தமிழ்ச்சோலை
வயலின் (குழு) மேற்பிரிவு
1ம் இடம் : லாகூர்நோவ் தமிழ்ச்சோலை
2ம் இடம்; : அம்பாள் இசைப்பள்ளி
3ம் இடம் : நொய்சிலுகுறோன் தமிழ்சோலை, ஓல்னேசுபுவா தமிழ்ச்சோலை
குரலிசை (குழு) கீழ்ப்பிரிவு
1ம் இடம் : இசைக்கதம்பம் (94)
2ம் இடம்; : இசைக்கதம்பம் (96)
3ம் இடம் : சோதியா கலைக் கல்லூரி
குரலிசை (குழு) மேற்பிரிவு
1ம் இடம் : சோதியா கலைக் கல்லூரி
2ம் இடம்; : சாகித்தியலயம் இசைப்பள்ளி
3ம் இடம் : இவ்றி சூசைன் இசைப்பள்ளி
இசைத்துளிர்
செல்வி தீபனி மதனராஜா சின்னத்துரை ( கீதாலயம் இசைப்பள்ளி )
ஊடகப் பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு