இலங்கையில் கொரோனா இரண்டாவது அலை ஏற்பட வாய்ப்பு அதிகம்!

0
596

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கடற்படையினர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை உரிய முறையில் முகாமைத்துவம் செய்யவில்லை என்றால் கொரோனாவின் இரண்டாவது அலை நாட்டினுள் ஏற்படக் கூடும் எனஅரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச்செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்ஸா தெரிவித்துள்ளார்.

இதுவரை உலக சுகாதார அமைப்பு ஆசியா, அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு இரண்டாவது கொரோனா அலை தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே மேற்குறிப்பிட்ட நோயாளிகளை முகாமைத்துவம் செய்வது அத்தியாவசியம் என அவர் குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கைக்காக சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், சுய தனிமைப்படுத்தல், கிருமிநாசினி தெளித்தல் மற்றும் முகக் கவசம் அணிதல் ஆகிய சுகாதாரப் பாதுகாப்புடன் செயற்படுதல் கட்டாயமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் நபர்களுக்காக வைத்தியசாலை மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களின் வசதிகளை அதிகரிக்கவேண்டும் எனவும் அவர் கோரினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here