பாரிஸ் உணவகங்கள் வெளிப்புறம் இயங்கவே அனுமதி!

0
693

பாரிஸ் பிராந்தியம் தவிர நாடு முழுவதும் பச்சை வலயமாக மாற்றப்படுகின்றது.

பச்சைப் பிராந்தியங்களில் (zone verte)உணவகங்கள், அருந்தகங்கள் அனைத்தும் வரும் ஜூன் 2ஆம் திகதி முதல் முழு அளவில் திறக்கப்படுகின்றன.

சிவப்பில் இருந்து செம்மஞ்சள் (Zone orange) நிறத்துக்கு மாறி உள்ள பாரிஸ் நகரை உள்ளடக்கிய இல் து பிரான்ஸ் பகுதியிலும் உணவகங்களைத் திறக்க முடியும். ஆனால் சேவைகள் வெளிப்புறங்களிலேயே (Terrasse) அனுமதிக்கப்படும்.உள்ளே தேநீர் அருந்துவதும் உண்பதும் மறு அறிவுத்தல் வரை தடைசெய்யப்பட்டிருக்கும்.

பிரதமர் எத்துவா பிலிப் இத்தகவல்களை இன்று அறிவித்தார்.

பெரும் முடக்கத்தில் இருந்து நாட்டை விடுவிக்கும் முதலாவது கட்டம் கடந்த மே 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. அதன் இரண்டாவது கட்டம் ஜூன் 2 ஆம் திகதி தொடங்குகிறது. தற்போது நடைமுறையில் உள்ள பொதுச் சுகாதாரக் கட்டுப்பாடுகளில் அடுத்த கட்டமாகச் செய்யப்படவிருக்கும் தளர்வுகள் பற்றிய விவரங்களை பிரதமர் எத்துவா பிலிப்பும் சுகாதார அமைச்சர் ஒலிவர் வேரனும் இன்று மாலை கூட்டாக தொலைக்காட்சி வாயிலாக அறிவித்தனர். .

அதன்படி ஜூன் 2 முதல் நடைமுறைக்கு வரவுள்ள இரண்டாவது கட்ட தளர்வுகளில் சில வருமாறு :

◾இல் து பிரான்ஸ் ( Île-de-France) , Guyana Mayotte பகுதிகள் தவிர நாட்டின் ஏனைய முழு இடங்களும் பச்சை வர்ண (zone verte)வலயமாக மாற்றப்படுகின்றன.

◾வதிவிடத்தில் இருந்து 100 கிலோ மீற்றர் களாக வரையறுக்கப்பட்டிருந்த பொது நடமாட்டக் கட்டுப்பாடு நீக்கப்படுகிறது .பொது இடங்களில் பத்துக்கு மேற்பட்டோர் ஒன்று கூட விதிக்கப்பட்டி ருக்கும் தடை தொடர்ந்து ஜூன் 22 வரை அமுலில் இருக்கும்.

◾செம்மஞ்சள் பகுதிகள் அடங்கலாக நாட்டின் சகல பிரதேசங்களிலும் பொதுப் பூங்காக்களும் தோட்டங்களும் ஜூன் 2 ஆம் திகதி திறக்கப்படும்.குறிப்பாக பாரிஸ் நகர பூங்காக்களும் திறக்கப்படுகின்றன.

◾பச்சை பகுதிகள் முழுவதும் உள்ள உயர் தரப்பள்ளிகள்( lycées) உட்பட பாடசாலைகள் அனைத்தும் ஜுலை 2 முதல் திறக்கப்படும். பல்கலைக்கழக அனுமதிக்கான BAC வாய் மொழி மூலப் பரீட்சைகள் இரத்துச் செய்யப்படுகின்றன.

◾பச்சைப் பிராந்தியங்களில் நீச்சல் தடாகங்களும் உள்ளக விளையாட்டு மண்டபங்களும் 2ஆம் திகதி முதல் திறக்கப்படும்.

◾அருங்காட்சியகங்கள், அரும் பெரும் நினைவிடங்கள் அனைத்தும் ஜூன் 2 ஆம் திகதியும் . சினிமா திரையரங்குகள் ஜூன் 22 ஆம் திகதி முதலும் திறக்கப்படும்.

◾தொற்றுக்குள்ளாவோரைக் கண்டறிய உதவும் StopCovid எனப்படும் சிமாட் போன் செயலி ஜூன் 2 முதல் நடைமுறைக்கு வருகிறது. இயன்றவரை அதனைப் பயன்படுத்த முன்வருமாறு பிரதமர் மக்களிடம் அழைப்பு விடுத்தார்.

28-05-2020

குமாரதாஸன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here