யாழ். வலி வடக்கு குரும்பசிட்டிப் பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து பெருமளவு வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த கிணற்றை சுத்தம் செய்யும் நடவடிக்கை இன்று (28) மேற்கொள்ளப்பட்ட போதே அதற்குள் வெடிபொருட்கள் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு விசேட அதிரடிப்படையினருடன் சென்ற பொலிஸார் அங்கிருந்த வெடிபொருட்களை மீட்டுள்ளனர்