தொண்டமானின் இழப்பு பேரிழப்பு – தமிழக முதலமைச்சர் எடப்பாடி!

0
372

இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் இறந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அன்னாரை இழந்துவாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், அந்நாட்டு மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.

இவ்வாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘தொண்டமான் மறைவு இலங்கை மக்களுக்கும், அந்நாட்டிற்கும் பேரிழப்பாகும். திறமைமிக்க அமைச்சரான தொண்டமான் இலங்கை தமிழ் மக்களின் நலனுக்காக பணியாற்றியவர்கள் என்ற பெருமைக்குரியவர்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினருக்கும், இலங்கை மக்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்’. – என்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here