2006.08.11 அன்று போர் நிறுத்தம் என்கின்ற பொறிக்குள் இருந்து தமிழீழம் என்கின்ற உன்னத இலட்சியத்திற்காக நான்காம் கட்ட ஈழப்போரை தமிழீழ விடுதலைப்புலிகள் ஆரம்பித்தனர். சண்டை வடபோர்முனையின் நான்கு முனைகளூடாக சமநேரத்தில் ஆரம்பித்தது. சண்டை ஆரம்பித்த [கண்டல் பகுதி, முகமாலை மத்திய பகுதி,இந்திராபுரம் பகுதி , கிளாலி பகுதி] ஒரு மனிநேரத்திற்குள்ளாக எதிரியின் முன்னரங்க பகுதிகளை கடந்து வேகமாக முன்னேறினர் புலிகள். இதில் சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி, மாலதி படையணி, சோதியா படையணி, இம்ரான் பாண்டியன் படையணி ,ராதாவான் காப்பு விசேட அணிகள் மற்றும் அரசியல் துறையின் சண்டையணி என முன்னரங்குகளிலும் குட்டிசிறி மோட்டார் படையணி, கிட்டுப்பீரங்கிப் படையணி , சண்டைவாகன அணி, வழங்கல் அணி, மருத்துவ அணி பின்னனியிலும் என சண்டை நகர்தப்பட்டுக் கொண்டிருந்தது.
இவ்வேளைகளில் வடபோர்முனையின் வலது பக்கமாக இம்ரான் பாண்டியன்படையணி, சோதியா படையணி மற்றும் ராதா படையணியின் விசேட அணியும் [கனரக ஆயுத அணி],இடது பக்கமாக சாள்ஸ் அன்ரனி படையணியும் மாலதி படையணியும் கிளாலி கரையோரமாக அரசியல் துறையினரும் ராதாபடையணியின் ஓர் அணியினரும் களம் இறக்கப்பட்டனர். இதில் கிளாலி கடல் நீரேரி ஊடாக லெப் கேணல் ராணி மைந்தன் கடற்புலிகளின் வீரம் சொறிந்த தாக்குதல் பல வற்றில் லெப்.கேணல் இரும்பொறையுடன் செயற்பட்ட நல்ல போர்வீரன் . தலைமையில் அரசியல் துறை போராளிகள் தரையிறக்கம் நடைபெற்ற போது அந்த தரையிறக்கம் சாதகமற்றதாகிப் போனதால் லெப்கேணல் ராணிமைந்தன் தானே முன்வந்து கிளாலி முன்னரங்கினை நோக்கி முன்னேற முயன்ற வேளை வீரச்சாவை தழுவிக்கொண்டான். இப்போது சண்டை மாற ஆரம்பித்தது. கிளாலி பகுதியில் இருந்தும் யாழில் இருந்து பிராதான வீதீயூடாகவும் நாகர் கோயில் பகுதியில் இருந்தும் இராணுவம் ஊடறுப்பு சண்டையினை சமநேரத்தில் ஆரம்பித்தது. இதன்போது பலத்த எறிகணைைத் தாக்குதல், விமானத் தாக்குதல் என்பன ஒருபுறமும் எழுதுமட்டுவாழில் இரகசிய மண்ணரண் அமைத்து இராணுவம் தாக்க ஆரம்பி்க்கவும் சண்டையின் போக்கு தலைகீழாகிப் போனது 14 ஆம் திகதி மதியத்தின் பின் எதிரி தனது மூன்றாவது மண்ணரணை மீளவும் கைப்பற்றி கொள்ளவும் பக்கவாட்டாக நகர்ந்த இராணுவ அணியை புலிகள் துவம்சம் செய்ய சண்டையின் போக்கு எமக்கு சாதமாக மாறத் தொடங்கியது மீண்டும் புலிகளின் கை ஓங்க ஆரம்பித்தது. இதில் சண்டையின் போக்கினை மாற்றியது சோதியா படையணியின் லெப்.கேணல் செல்வி தலைமையிலான போராளிகளும் ராதா படையணியின் சினைப்பர் அணி உந்துகணை அணியும் ஆவர் இதில் மோட்டார் மற்றும் ஆட்லறி அணியினரின் சூட்டாதரவு முக்கிய பங்காற்றியது முக்கியமாகும் இவ்வாறு சண்டை மாற இரண்டு காரணங்கள் ஒன்று தளபதி தீபன் அண்ணருடன் தளபதி பால்ராஜ் அண்ணா கைகோர்த்தமை போராளிகளின் உக்கிரமான தாக்குதலாகும். எதிரியின் மொனிற்றரிங் அணி இரானுவ தளபதிக்கு பால்ராஜ் அண்ணரின் வருகை பற்றியும் சண்டையில் போராளிகள் உக்கிர தாக்குல் பற்றியும் தெரிவிக்க வெலவெலத்துப்போன இராணுவத் தலைமை கேழைத்தனமான தாக்குதலை ஆரம்பித்து அதுதான் முல்லைத்தீவு வள்ளிபுனத்தில் செஞ்சோலை வளாகம் மீதான விமானத் தாக்குதலாகும். இதன் காரணமாக சண்டை மீதான கவனத்தை விடவும் புலிகளின் முழுக்கவனமும் செஞ்சோலை மீது திரும்பியது. மருத்துவ வழங்கல் உட்படஇதனால் தலைவர் சண்டை நிறுத்தி தற்காப்பு போர்முறைக்கு மாறுமாறு தளபதி தீபனுக்குக் கூற களமுனையிலிருந்து பின்வாங்க ஆரம்பித்த புலிகளின் அணிகளால் எதிரியின் பகுதிகளில் ஊடுருவி நின்ற போராளிகளால் வீரச்சாவடைந்த போராளிகளின் வித்துடலைக் கொண்டுவர முடியவில்லை. காரணம் தொடர் சண்டையின் தாக்கம் காயமடைந்த போராளிகள் ஆயுதங்கள் என பெரும்சுமையின் காரணமாக வீரச்சாவடைந்த போராளிகளின் வித்துடலை எதிரியின் பதுங்கு குழிகளிலேயே அடக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது அவ்வேளைகளில் வீரச்சாவடைந்த போராளிகளின் வித்துடல்களே இவைகளாகும்.
அந்த யுத்தத்தில் எமது தரப்பில் 372 போராளிகள் வீரச்சாவடைந்தனர் இதில் 30 க்குட்பட்ட போராளிகளின் வித்துடல்கள் கிடைக்கப் பெறவில்லை அதில் எம்மால் தவறவிடப்பட்ட போராளிகளது வி்த்துடல்களாகவே இவை இருக்கும்…!
கனத்த நெஞ்சோடு
வட போர்முனையின்
ஒரு கீற்றின் குரல்
அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம்!