முக நூல் நண்பர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு மிகவும் அன்பான வேண்டுகோள்..
யாராவது தற்கொலை செய்தால் அந்த செய்திகளுக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்..
அண்மைக் காலமாக கிழக்கு மாகாணத்தில் தற்கொலை செய்யும் வீதம் அதிகரித்து கொண்டே செல்கின்றது..
நன்றாக சிந்தித்து பாருங்கள். கடந்த காலங்களில் கல்லடி பாலமும் தற்போது தூக்கில் தொங்கி மரணிப்பதும் அதிகரித்தே செல்கின்றது.
இதற்கு மிக முக்கியமான காரணம் அதிக மன உளைச்சல் ஏற்படும் வேளையில் எவ்வாறு அதை சமாளிப்பது என்று முடிவெடுக்க தெரியாமல் தற்கொலைக்கு முடிவு எடுக்கிறார்கள்..
இதற்கு அண்மைக் காலமாக சமூக வலைத்தளங்களில் புகைப்படத்துடன் செய்திகளை பகிர்வது பிரதானமான காரணமாக அமைகின்றது .. இந்த வகையான பகிர்வுகள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வலம் வருவதால் இவையே மன உளைச்சலுக்கு உள்ளாகும் ஒருவர் கணப் பொழுதில் சற்றும் சிந்திக்காமல் தற் கொலை செய்ய தீர்மானம் எடுக்க காரணமாக அமைகின்றன..
எனவே எதிர் வரும் காலங்களில் தற்கொலைகளை இயன்றளவு குறைக்க ஒத்துழைப்பு வழங்குமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
இனி மேலும் சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான செய்திகளை புகைப்படங்களுடன் பதிவேற்றுவதை இயன்றளவு குறைத்து தற் கொலை தூண்டுதல்களை குறைக்க உதவுமாறு அனைத்து அன்பு உள்ளங்களையும் மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்..
இயன் மருத்துவர் K. ஹரன்ராஜ்.