முகமாலையில் நெஞ்சோடு துப்பாக்கியை அணைத்தபடி ஒரு போராளியின் வித்துடல் காணப்பட்டுள்ளது.
முகமாலை முன்னரங்க பதுங்கு குழி ஒன்றில் இருந்து விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் துப்பாக்கியுடன் போராளி ஒருவரின் வித்துடல் அடையாளம் காணப்பட்டுள்ளது..
நெஞ்சோடு துப்பாக்கியை அணைத்தவாறு குறித்த மாவீரரின் வித்துடல் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
போராளிகள் தமது ஆயுதத்தை உயிரிலும் மேலானதாகவே பாதுகாப்பார்கள்.. எந்த சூழ் நிலையிலும் ஆயுதத்தை கைவிடக் கூடாது என்பதும் ஆயுதத்தின் மீது உறுதியுரை எடுப்பதும் புலிகளின் மரபு..
சண்டையில் பதுங்கு குழிக்குள்ளேயே இந்த போராளி வீரச்சாவடைந்திருக்கிறார். மரணிக்கும் போது துப்பாக்கியை நெஞ்சோடு அணைத்து வைத்திருக்கிறார்.
விமானத்தாக்குதலால் இந்த பதுங்கு குழி மண்ணால் மூடப்பட்டிருக்கலாம்.
முகமாலை என்பதால் இந்த போராளி மாவீரராக ஏதோ ஒரு துயிலுமில்லத்தில் நடுகல்லாக ஒளி வீசிக்கொண்டிருந்திருப்பார்…
பெண்போராளியின் வித்துடல் என்று சந்தேகிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..
விடுதலை வேட்கையை நெஞ்சினில் சுமந்து சண்டைக் களத்திலே மார்பில் குண்டேந்தி துப்பாக்கியை நெஞ்சோடு அணைத்தபடி கிடக்கும் வித்துடல் மீது ஒரு சத்தியம் செய்து கொள்வோம்..
வீரவணக்கம்..!
நிரஞ்சன் தங்கராஜா