கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று (21) காலை முதல் வீசிய பலத்த காற்றுக் காரணமாக பூநகரி, குடமுருட்டி பகுதியில் உள்ள மின் கம்பங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.
இவ்வாறு ஆறு மின்கம்பங்கள் முற்றாக சேதமடைந்துள்ளது.
இதன்காரணமாக பூநகரிப் பிரதேசத்தில் உள்ள பல கிராமங்களுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
இதே வேளை கிளிநொச்சி இரத்தினபுரம் சித்தி விநாயகர் ஆலயத்திற்கு முன்பாக காணப்பட்ட பாரிய பாலை மரம் வீழ்ந்தன் காரணமான இரண்டு மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளது.
இதனால் வட்டக்கச்சி, இராமநாதபுரம் பகுதிகளுக்கான மின்சாரம் முற்றாக தடைப்பட்டுள்ளது.
பல பகுதிகளில் வீடுகள், உடமைகள் சேதமடைந்துள்ளன.
இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட காற்றின் வேகம் காரணமாக அறுவடை செய்யும் நிலையில் இருந்த பல வாழைமரங்கள் முறிவடைந்து பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவின் பாதிப்பில் தவிக்கும் மக்களை மேலும் இவ்வாறான இயற்கை அனர்த்தங்களும் தாக்குவது வீழ்ந்தவனை மாடேறிமிதித்த நிலையாகவே பார்க்கப்படுகின்றது.