பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் முன்னைநாள் தலைவரும் Neuilly-sur-Marne தமிழ்ச் சங்க முன்னை நாள் தலைவரும் யாழ். தெல்லிப்பளை கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Neuilly-sur-Marne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவராஜா அவர்கள் 31-05-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று சாவடைந்துள்ளார்.
இவர் தமிழீழ விடுதலையை நேசித்து வந்ததுடன், தேசிய செயற்பாட்டு நிகழ்வுகளில் சிரத்தையுடன் பணியாற்றியும் வந்துள்ள ஒரு செயற்பாட்டாளராவார்.
அன்னாரது இறுதிவணக்க நிகழ்வுகள் பற்றி பின்னர் அறியத்தரப்படும் என பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.