புலிகளின் காலத்தில் நள்ளிரவில்கூட பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு:விஜயகலா மகேஸ்வரன்

0
237

vijayakalaபுலிகளின் காலத்தில் நள்ளிரவில் கூட பெண்களும் சிறுமிகளும் பாதுகாப்பான முறையில் வீட்டை விட்டு வெளியேறிச் செல்லக்கூடிய சூழ்நிலை காணப்பட்டது. வடக்கு பெண்கள் பாதுகாப் பினை உணர்ந்ததாக மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற பல வன்முறைகளை கடந்த அரசாங்கம் ஊடகங்களில் வெளியிடப்படுவதனை தடுத்து நிறுத்தியதாகத் தெரிவித்துள்ளார். எனினும் புதிய அரசாங்கம் எவ்வித ஊடகத் தணிக்கைகளையும் விதிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடக சுதந்திரம் காணப்படுவதனால் வித்தியா மீதான பாலியல் வன்கொடுமையும், படுகொலையும் அம்பலப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்க ஆட்சிக்காலத்தில் வடக்கில் காவல்துறையினருக்கு எவ்வித அதிகாரமும் வழங்கப்படவில்லை எனவும், படையினரே கட்டுப்பாட்டை வைத்திருந்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் சிவிலியன் ஆட்சி அறிமுகம் செய்யப்பட்ட போதிலும் இன்னமும் காவல்துறையினர் வினைத்திறனாக செயற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here