இன்று சனிக்கிழமையன்று தமிழின அழிப்பு வாரத்தின் நான்காம்_நாள் நினைவேந்தல் மூன்று வேறு இடங்களில் சிறிலங்கா முப்படைகளின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் நினைவேந்தப்பட்டது.
1) யாழ்ப்பாணத்தில் 1974 ஆம் ஆண்டு சிறீலங்கா காவற்துறையினால் 11 பேர் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூர்ந்தும்
2) மண்டைதீவு கடலில் 1986 ஆம் ஆண்டு சிறீலங்கா கடற்படையினரால் 31 பேர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூர்ந்தும்
3) குருநகர் யாகப்பர் தேவாலையத்தின் மீது 1993 ஆம் ஆண்டு சிறீலங்கா விமானப்படையினரால் நடத்தப்பட்ட விமானத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 13 பேரை நினைவுகூர்ந்தும்
இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. மூன்று பகுதிகளிலும் சிறிலங்கா படையினர் நினைவேந்தலைத் தடுப்பதில் குறியாக இருந்ததுடன், ஊடகவியலாளர்கள் மற்றும் கலந்துகொண்ட அனைவரையும் படம்பிடித்து அச்சுறுத்தல் விடுத்தனர்.
——————————————————————