யாழ்.பருத்தித்துறை மந்திகை பகுதியில் இ ராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக் கான இ ளைஞன் வைத்தியசாலையில் அ னு மதிக்கப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந் தச் சூட் டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் புலோலியைச் சேர்ந்த பசுபதி அனுசன் (வயது -22) என்ற இளைஞனே கை மற்றும் கா லில் துப்பாக்கி ரவை பாய்ந்த நிலையில் ப டுகாயமடைந்துள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
“மந்திகை வைத்தியசாலைக்கு முன்பாக கா வல் கடமையில் ஈடுபட்டிருந்த படைச் சிப்பா ய் ஒருவர், இனந் தெரியாதோரால் தாக்கப்பட்டதாகவும்.
சிப்பாயின் கையில் கல்லடிபட்டு படுகாயமடைந்துள்ளார். அதனால் தாக்குதல் நடத்தியோரைத் தேடி இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
அந்தவேளை, குறித்த இளைஞன் உந்துருளியில் பயணித்தபோது இராணு வத்தினர் மறித்துள்ளனர். எனினும் அதனை மீ றிச் சென்ற போது துப்பாக்கிச் சூ டு நட த் தப்பட்டது.” என ஆரம்ப விசாரணைகளில் இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.
அதன் போது சூட்டுக்கு இலக்காகிய இளைஞன் வீட்டுக்குச் சென்று அவசர உதவி நோயாளர் காவு வண்டி வரவழைக்கப்பட்டு மந்திகை வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளார்.
குருதிப் போக்கு உள்ளபோதும் இ ளைஞன் பா துகாப்பாக உ ள்ளார் என்று தெரிவிக்கப் பட்டது. சம்பவம் தொ டர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத் துள்ளனர்.
இதேவேளை,புலோலி இளைஞன்மீது இராணுவம் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதை ஒருபோதும் ஏற்க முடியாது…தமிழர் தாயகத்திலிருந்து இராணுவப் பிரசன்னம் அகற்றப்படவேண்டும் என்ற எமது நிலைப்பாட்டை மீள வலியுறுத்துவதோடு பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க குரல் கொடுப்போம் என்று சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் தெரிவித்துள்ளதோடு, மந்திகை வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இந்நிலையில், மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனுசனை தமிழ்த்தேசிய மக்கள்முன்னணியின் தலைவர் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இன்று நேரில்சென்று பார்வையிட்டார் .