மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த ஊடகவியலாளரின் இறுதிக் கிரிகைகள் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் திருகோணமலை இந்து மயானத்தில் இடம்பெற்றது.
இறுதிக்கிரிகை நிகழ்வுகளில் சில கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் உறவினர்களும் , ஊடகவியலாளர்களும் மற்றும் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
பெரியகல்லாறு நாகதம்பிரான் ஆலயத்துக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் தீபம் ஊடக நிறுவனத்தில் பணியாற்றிய திருகோணமலை உள்துறைமுக வீதியைச் சேர்ந்த மிதுன்சங்கர் ( வயது 21 ) உயிரிழந்தார்.
குறித்த ஊடகவியலாளரும் மற்றும் அவரது நண்பர்களான மூன்று ஊடகவியலாளர் உட்பட 4 பேர் இரண்டு உந்துருளிகளில் மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இருந்து கல்முனைக்கு உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போதே பெரியகல்லாறு நாகதம்பிரான் ஆலயத்துக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.