வீதியால் சென்றவர்களும் யாழில் கைதுசெய்யப்பட்டனர்!

0
395

vithija6யாழ்.நகரில் கடந்த 20ம் திகதி நீதிமன்றம் முன்பாக இடம்பெற்ற அசம்பாவிதங்களின் பின்னர் கைதுசெய்யப்பட்ட 130பேரில் மரணவீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தவர்களும் உள்ளடங்கியுள்ளனர்.இக்கைது நடவடிக்கைகளின் போது பாடசாலை மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் என அகப்பட்ட அனைவரையும் கைதுசெய்து புள்ளிவிபரங்களை காண்பித்தனர்.

இதன் உண்மைகள் தற்போதுதான் வெளிவந்தவண்ணம் உள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் மாணவர்கள் 23பேரும் அரச உத்தியோகத்தர்கள் 13பேரும் உள்ளடங்குவது மட்டுமன்றி அன்றைய தினம் இடம்பெற்ற மரணவீடு ஒன்றில் பாண்ட் வாத்தியம் இசைத்துவிட்டு குருநகரில் உள்ள தமது வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தவர்களும் தப்பவில்லை.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 08பேரும் ஓர் முச்சக்கர வண்டியில் வாத்தியக்கருவிகளுடன் திரும்பிக் கொண்டிருந்த சமயமே கைது செய்யப்பட்டுள்ளனர். இவைகளும் தற்போது யாழ் நீதிமன்றில் வைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களான சாந்தகுமார்.காந்தன்.விஜிதரன். அனிஸ்வரன். ரிடோ. சேல்லா. ஜோன் ஆகியோர் தொடர்ந்தும் அநுராதபுரம் சிறைச் சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here