பிரான்சில் வதிவிடத்தில் இருந்து 100 கிலோ மீற்றர்களுக்கு வெளியே பயணம் செய்வோருக்கான அனுமதிப்படிவத்தை உள்துறை அமைச்சு வெளியிட்டிருக்கிறது.
மக்கள் வீடுகளுக்கு வெளியே வந்து நடமாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நேற்று முதல் நீக்கப்பட்டுள்ளன.ஆனால் வதிவிடத்தை விட்டு 100 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் செல்வதாயின் அதற்கான காரணத்தை படிவம் ஒன்றில் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
படிவத்தின் மாதிரியையும் அதனைப் பெற்றுக் கொள்வதற்கான இணைப்பையும் உள்துறை அமைச்சு தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிட்டிருக்கிறது.
வதிவிடத்தில் இருந்து 100 கிலோ மீற்றர் தூரம் என்பது வீதிகள் வழியே அன்றி பறவை பறக்கும் (As the crow flies) குறுக்குத் தூரத்தின் அளவீடுகளின்படி-இரண்டு புள்ளிகளுக்கு இடையில் – கணிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
படிவத்தைப் பெற்றுக்கொள்வதற்கான இணைப்பு :
குமாரதாஸன்.