“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” என்ற தாயின் கதறலோடு வழியனுப்பப்பட்ட இரு பிஞ்சுகள்!

0
1900


லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரியை இன்று இடம்பெற்றது.

தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ஆம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது.

அவர்கள் இருவரையும் ஒன்றாகவே, பெட்டியில் வைத்திருந்தார்கள். “அண்ணா உனக்குத் துணை நிற்பானடா” என்று அம்மா கதறி அழ, பால் குடித்து விட்டு படுக்கச் சென்ற பிள்ளையைக் கொன்றாரே என்ற சத்தம் விண்ணைப் பிழக்க, கல் நெஞ்சம் கொண்டவரையும் கரைய வைக்கும் ஓலமாக இருந்தது அது.

இந்தச் சின்னஞ் சிறு மழலைகள் என்ன பிழை செய்தார்கள் என்று எண்ணத் தோன்றும். அங்கே நின்ற பலரும் இந்த கேள்வியைத் தான் மனதில் எழுப்பி இருப்பார்கள்.

காலை 10 மணிக்கு ஆரம்பமாகிய ஈறுதிக்கிரியைகள், 11.30க்கு முடிய. 12 மணிக்கு நல்லடம் செய்யப்பட்டது இந்த பிஞ்சுகளின் உடல்கள்.

இவர்கள் அதிகம் விளையாடிய பொருட்கள் அவர்களின் நல்லடக்க பெட்டியினுள் இருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது. லண்டன் ஈழத் தமிழர்கள் சமூகத்தில் நடந்த மிகப் பெரிய சோகமான நிகழ்வாக இது இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here